புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்!
மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா?
பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை!
முக்கிய செய்திகள்
அனைத்தும் காணமாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா?
பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை!
sample
உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
வீரபாண்டிய கட்டபொம்மன்
வாழ்க்கை வரலாறு
பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.
வரலாறு முழுவதும் படிக்க →
பிரபலங்கள்
மேலும் காணsample
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை தி.காரிஹா சாதனை!
தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை!
தேசிய அளவிலான தேர்வில் வெற்றிபெற்று வழிகாட்டும் இளந்தளிர் பூர்ணா!
சீமான்களின் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற சாமானியன்!
பாராட்டு மழையில் வெள்ளிப்பதக்கம் வென்ற விபிக்ஷா!
செய்திகள்
மேலும் காணபுதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்!
sample
சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்!
நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்!
வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ
திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்!
சடங்கு & சம்பிரதாயம்
மேலும் காணஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!
கொங்கு மண்டலத்தில் - நம்ம வீட்டுக்கல்யாணம்.
இது நாமக்கல் மாவட்ட கம்பளத்தார் வீட்டுக் கல்யாண மணமக்கள் அழைப்பு
செல்வன்.பெ.இராஜாமணி(எ)கரிகாலனுக்கும், செல்வி.ர.உமாமகேஸ்வரிக்கும், கம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி திருமணம்
கலை
மேலும் காணமாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா?
sample
பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை?
விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விழுதுகள்
மேலும் காணமகளிர் ஸ்பெஷல்
மேலும் காணஇவரல்லவோ உண்மையான புரட்சித்தலைவி!
மகா சக்தியின் மூல வடிவம் பெண்!- மீண்டும் நிரூபித்த மாளவிகா ஹெக்டே!
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு போராடிய இந்திய இளவரசி!
கம்பளத்தார் குலம் காக்கும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்!
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம், பொரி உருண்டை ரெசிபி!
ஐந்து பொருள்கள் இருந்த போதும் சருமம் பளபளக்கு!
Youtube
மேலும் காணமாவீரன் கட்டபொம்மனாரின் 223-வது நினைவுநாள் ரவுண்டப்-2
மாவீரன் கட்டபொம்மனாரின் 223-வது நினைவுநாள் ரவுண்டப்-1
அஸ்தமனம் காணா பேரரசை ஆட்டம் காணச்செய்தவர் விருப்பாச்சி கோபால நாயக்கர்- AMR.துரைசாமி அசத்தல் பேச்சு
சிறப்புடன் நிறைவுபெற்றது சித்திரைத்தேர் விழா! இறுதிநாளில் பங்கேற்று பரிசளித்தார் தலைவர்!
ஜமீன் ராமபட்டிணம் தேர்திருவிழாவில் கம்பளத்தாரின் ஒயிலாட்டம்!
போலீசாருடன் கடும் வாக்குவாதம்! கோட்டைக்குள் நுழைந்த கம்பளத்தார்!
ஆன்மீகம்
மேலும் காணஇல்லம்தோறும் இல்லுறை தெய்வ வழிபாடு!
போசாள மன்னனுக்கு திதிகொடுத்த அண்ணாமலையார்!
பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதற்கு காரணம்
வறுமையிலும் விதை நெல்லைக் கொண்டு சிவனடியாருக்கு அமுது செய்த இளையாங்குடி மாற நாயனார்!
குருமகாசன்னிதானத்திடம் துறவறம் பெற்று சைவம் வளர்க்கும் அருள்முருக அடிகளார்!
வரம் தரும் வரலட்சுமி விரதம் உருவான கதை!
▣மகளிர் ஸ்பெஷல்
மேலும் காண"சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளி."
சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்!
நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்!
▶YouTube செய்திகள்
மேலும் காண▣புகைப்பட தொகுப்பு
♧விழுதுகள்
அதிமுக ஒன்றியச் செயலாளராக திரு.டி.சிவசாமி நியமனம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றியச் செயலாளராக வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளரும், அக்கட்சியின் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளருமான திரு. டி. சிவசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மாசேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த டி. சிவசாமி, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளராகவும், அதிமுகவில் கோவை புறநகர் மத்திய மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கட்சிப் பணியில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவரது சேவையைப் பாராட்டி, கோவை புறநகர் மத்திய மாவட்டம் மதுக்கரை ஒன்றியச் செயலாளராக அவரை அதிமுக பொதுச்செயலாளர் நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, டி. சிவசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க
செய்தி துணுக்குகள்வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ

வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலில் பணியாற்றிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய்கண்ணன் (34) திடீரென உயிரிழந்தார். வெளிநாட்டில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னர், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் உடல் பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் துரை வைகோவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

கடலில் நிகழ்ந்த சோகம்:

தூத்துக்குடி மாவட்டம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கல்வெட்டு செல்வத்தின் இளைய மகன் ஜெய்கண்ணன், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புகழ்பெற்ற சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான Zodiac Maritime Agencies-இல் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா மயில். இவரது மூத்த சகோதரர் கணேஷ், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 27.04.2026 அன்று, நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஜெய்கண்ணன் பணிக்கு வராததால், சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கருதி எழுப்பாமல் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையில் கப்பல் வியட்நாமிலிருந்து புறப்பட்டுவிட்டது. பின்னர் மீண்டும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அதே நிலையில் இருந்த ஜெய்கண்ணனை எழுப்ப முயன்றபோதுதான் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

கப்பலிலேயே பாதுகாக்கப்பட்ட உடல்:

கப்பல் ஏற்கனவே கடலுக்குள் பயணித்துக் கொண்டிருந்ததால் உடனடியாக கரை சேர முடியவில்லை. மேலும், கப்பலில் உடலைப் பாதுகாக்கும் சிறப்பு வசதிகள் இல்லாததால்,மீன்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியில் (Freezer) அவரது உடலை பாதுகாத்து வந்தனர்.

இறுதியாக 08.05.2026 அன்று கப்பல் சீனத் துறைமுகத்தை வந்தடைந்ததும், ஜெய்கண்ணன் உடல் கரைக்கு இறக்கப்பட்டது.

துரை வைகோவின் உடனடி தலையீடு:

ஜெய்கண்ணன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்காக அவரது குடும்பத்தினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை அணுகினர்.

இதையடுத்து துரை வைகோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை உடனடியாகக் கொண்டு சென்று, உடலை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவையான ஆவணங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகளை விரைந்து நிறைவு செய்து இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் பேரில் சீனாவில் ஜெய்கண்ணன் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேவையான அனைத்து நிர்வாக நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டன.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய உடல்:

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 21.06.2026 அன்று ஜெய்கண்ணன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெய்கண்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடும்பத்தினரை நெகிழச் செய்த மனிதநேயம் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு மட்டுமல்லாமல், இறுதி மரியாதையில் பங்கேற்க தனது கட்சி நிர்வாகிகளையும் துரை வைகோ அனுப்பி வைத்திருந்தது ஜெய்கண்ணன் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

தங்களது இக்கட்டான சூழலில் உறுதுணையாக இருந்து உதவிய துரை வைகோவுக்கு ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க